---Advertisement---

கொரோனா ரேபிட் டெஸ்ட்டில் உள்ள சிறு குறை என்ன தெரியுமா?

By Sri
Published on: April 10, 2020
---Advertisement---

கொரோனா ரேபிட் டெஸ்ட்டின் மூலம் கொரோனா தொற்று இருப்பவர்களை எளிதாகக் கண்டறியலாம். ஆனால் சோதனைக்குப் பின்னர் நெகட்டிவ் முடிவுகளை மிகத்துல்லியமாகக் கண்டறிய முடியாது என சொல்லப்படுகிறது.

எல்லாருமே Rapid Test Kit பத்தி பேச ஆரம்பிச்சிட்டோம்….. அதை பத்தி கொஞ்சம் தெரிந்துக் கொள்வோம். இந்த டெஸ்ட் செய்தால் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்துக்குள் முடிவு தெரிஞ்சிடும். பாசிடிவ் வந்தால் நோய் இருக்குன்னு உறுதிப் பண்ணுவாங்க… சம்பந்தபட்ட நபரோடு தொடர்புள்ளவர்களையெல்லாம் வேகமாய் தனிமைப்படுத்தி இந்த நோய் வேகமாய் பரவுவதை தடுப்பதற்கு இந்த முறை பெரிதும் உதவும்.

ஆனால் நெகடிவ் ரிப்போர்ட் வருதுன்னு வைச்சிக்கங்க… உடனே நெகடிவ்னு கொடுக்க முடியாது… மறுபடியும் RT PCR ல டெஸ்ட் பண்ணி நெகடிவ்னு வந்தா மாத்திரமே நெகடிவ்னு சொல்ல முடியும்….. ரேபிட் டெஸ்ட்ல False Negative வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இது மாதிரி கன்பார்ம் பண்ண வேண்டி வரும்… நாம் டெஸ்ட் பண்ற சாம்பிளில் ஒரு வைரஸ் இருந்தா கூட RT PCR ஐ பயன்படுத்தி கண்டுபிடிச்சிடலாம்… ஆனால் இந்த ரேபிட் டெஸ்ட்ல எடுக்கும் sample ல தேவையான அளவிற்கு Antibodies இருந்தா மட்டுமே பாசிடிவ்னு காட்டும்.

அதனால ஒருத்தருக்கு Rapid Testல் நெகடிவ்னு வந்தா அந்த மனிதருக்கு நெகடிவ்னு அர்த்தம் இல்லைங்க…. அப்புறம் ஏன்டா இதை பயன்படுத்துறோம்.. கொஞ்சம் வேகமாய் பாசிடிவ் கேஸ்களை கண்டறிவதற்காய் தான்…

எங்கே பயன்படுத்தலாம்?

கொரானா அதிகமாய் பாதிக்கப்பட்டிருக்க இடங்களில் …

*முகநூல் பதிவு ஒன்றில் இருந்து

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.