---Advertisement---

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

By Sri
Published on: September 27, 2024
---Advertisement---

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை குறைந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் சில இடங்களில் மாலை மற்றும் இரவு பொழுதுகளில் மழை பெய்ய தொடங்கி இருக்கின்றது.

நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மலை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. மேலும் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கின்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும்,  தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. மேலும் கேரளா மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளிலும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic highlighting blockbuster actress Preity Mukhundhan's journey into Kollywood with her parents' support.

நடிக்க என்னைத் தூண்டியது என் பெற்றோர்தான்: பிளாக்பஸ்டர் நாயகி பிரீதி முகுந்தன் ஓபன் டாக்!

Conceptual graphic representing the exciting collaboration between director Mohan Raja and actor Karthi.

எம்.குமரன் மற்றும் தனி ஒருவன் கலவை: கார்த்தி ஜோடிக்கும் மோகன் ராஜா – அதிகாரப்பூர்வமாக வெளியான செம மாஸ் அப்டேட்!

Conceptual graphic representing the collaboration between actor Vishal and director RS Durai Senthilkumar for 7 Screen Studio.

விஷாலின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்: லலித் குமார் உதவியால் மீண்டும் இணையும் கூட்டணி – இயக்கவிருக்கும் பிரபல இயக்குநர்!

Concept graphic celebrating Maestro Ilaiyaraaja's soulful composition of the Muthumani song for Dorothy.

இளையராஜாவின் மேஜிக் ஹார்மோனியம்: ‘டொரா தி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட படக்குழு!

Official release date announcement poster for Fahadh Faasil's Don't Trouble The Trouble.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஃபஹத் பாசிலின் ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ புதிய ரிலீஸ் தேதி வெளியீடு!

Popular Kollywood actor brothers Suriya and Karthi sharing a warm bond.

கார்த்தி பற்றி நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு: “அவன் வழி தனி வழி.. அவனுக்கு சினிமாதான் உலகம்!” வைரலாகும் பாராட்டு!