கடந்த இரண்டு வருடங்களும் அனைவருக்கும் மிக கஷ்டமான காலங்களாய் போய்விட்டது. இந்த வருடமாவது அனைவருக்கும் நல்ல ஆண்டாக பிறக்குமா என்ற நம்பிக்கையோடு 2022ம் வருடம் பிறந்துள்ளது.
இதுவரை இருந்த கஷ்டங்கள் விலகி அனைவருக்கும் இந்த புத்தாண்டு நன்மையை தரும் என நம்புவோம்.
இந்த வருடம் அனைவருக்கும் நன்மையை செய்யட்டும் என உங்களுக்கு மட்டுமல்லாமல் இந்த உலகத்தில் வாழும் அனைவருக்காகவும் உலக நன்மைக்காகவும் இன்று கோவில் சென்று வழிபாடு செய்து கொள்வோம்.
இந்த 2022ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.







