---Advertisement---

H Vinoth Next : “தீரன் இஸ் பேக்” – கார்த்தியுடன் மீண்டும் இணையும் எச் வினோத்; சூர்யா, தனுஷ் படங்கள் என்னாச்சு? ஷாக்கிங் அப்டேட்!

Published on: April 13, 2026
Director H. Vinoth and actor Karthi planning for the sequel of Theeran Adhigaaram Ondru.
---Advertisement---

தமிழ் சினிமாவுல எதார்த்தமான அதே சமயம் மிரட்டலான ஆக்ஷன் படங்களை குடுக்குறதுல எச். வினோத் ஒரு திறமைசாலி . ‘சதுரங்க வேட்டை’ படத்துல ஆரம்பிச்சு இப்போ தளபதி விஜய்யோட ‘ஜனநாயகன்’ படம் வரைக்கும் அவரோட கிராப் ஏறிட்டே போகுது. ஜனநாயகன் படத்தோட ரிலீஸ் வேலைகள் ஒரு பக்கம் போயிட்டு இருக்குற இந்த நேரத்துல, வினோத்தோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு கோலிவுட்ல பெரிய விவாதமே நடந்துச்சு. இப்போ அதுக்கான விடை கிடைச்சுருக்கு. வினோத்தோட அடுத்த இமிடியட் ப்ராஜெக்ட் (Immediate Project) நடிகர் கார்த்தி கூட தான் அமையப்போகுது.

இது வேற எதுவும் இல்ல, 2017-ல ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தோட இரண்டாம் பாகம் தான். தீரன் படத்துல கார்த்தியோட அந்த நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டர் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிச்சுருந்துச்சு. இப்போ மறுபடியும் அதே காம்போ இணையுறதுனால படத்து மேல இப்போவே பெரிய ஹைப் ஏறிடுச்சு. கார்த்தி இப்போ இருக்குற கமிட்மென்ட்களை முடிச்சுட்டு, வினோத் கூட ஜாயின் பண்ணப்போறாரு.

தீரன் 2 படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை வினோத் ஏற்கனவே ஆரம்பிச்சுட்டதா சினிமா வட்டாரத்துல பேசிக்கிறாங்க.

வினோத் அடுத்ததா சூர்யாவை வெச்சு படம் பண்ணுவாருன்னு தான் எல்லாரும் எதிர்பார்த்தாங்க. ஆனா சூர்யா இப்போ ஃபேமிலி டிராமாக்கள்ல ஆர்வம் காட்டுறதுனாலயும், மத்த இயக்குநர்களோட கமிட்மென்ட்ல பிஸியா இருக்குறதுனாலயும் வினோத் – சூர்யா படம் தற்காலிகமா தள்ளிப்போயிருக்கு. சூர்யா இப்போ ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்துல பிஸியா இருக்குறது ஒரு முக்கியமான காரணம். இதனால தான் வினோத் இப்போ கார்த்தி பக்கம் தன்னோட கவனத்தை திருப்பி இருக்காரு.

அதே மாதிரி தனுஷ் – எச். வினோத் கூட்டணியும் இன்னும் ரத்தாகல. அதுவும் வினோத்தோட லிஸ்ட்ல இருக்கு. ஆனா கார்த்தி படத்தை முடிச்சதுக்கு அப்புறம் தான் தனுஷ் படத்தோட வேலைகளை வினோத் கையில் எடுப்பாருன்னு தெரியுது. தனுஷும் இப்போ வேற சில ப்ராஜெக்ட்ஸ்ல பிஸியா இருக்குறதுனால, இந்த காம்போ அமைய இன்னும் கொஞ்ச காலம் ஆகும். வினோத் எப்பவுமே ஒரு படத்தை கையில் எடுத்தா அதுல முழு கவனத்தையும் செலுத்துற ஆளுன்றதுனால, இப்போதைக்கு அவரோட முழு போக்கஸும் தீரன் 2 மேல தான் இருக்கு.

ஜனநாயகன் படத்துக்கு அப்புறம் தீரன் 2 மூலமா வினோத் ஒரு மெகா ஹிட் குடுக்க ரெடியாகிட்டாரு.

தீரன் முதல் பாகத்துல காட்டுன அந்த ராவான மேக்கிங் இப்போ இரண்டாம் பாகத்துலயும் இருக்குமான்னு ரசிகர்கள் ஆவலா இருக்காங்க. இந்த முறையும் உண்மை சம்பவத்தை அடிப்படையா வெச்சு தான் கதை இருக்கும்னு சொல்லப்படுது. கார்த்திக்கும் வினோத்துக்கும் இடையில இருக்குற அந்த ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் கண்டிப்பா ஸ்கிரீன்ல ஒரு மேஜிக்கை உருவாக்கும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்கள்ல வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!

Vijay Sethupathi and director Mysskin at the Train teaser launch event.

‘டிரெய்ன்’ படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! ‘செட்டு ஒரு கல்யாண வீடு மாதிரி இருந்தது’ – விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!

New official flag unveiled by the All India Dhanush Fan Club.

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் தனுஷ் ரசிகர்கள்! புதிய கொடியை அறிமுகப்படுத்திய அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம்!

Engal Thangam movie poster showing the lead actress.

‘எங்கள் தங்கம்’ வெற்றிக்குப் பின்னால் இருந்த கசப்பான உண்மை! ஹீரோயின் படங்களை ஏன் புறக்கணித்தனர்? தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!