---Advertisement---

குருவாயூர் கோவிலில் வாங்கிய 10 கோடியை திரும்ப கொடுங்க- அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு

Published on: December 20, 2020
---Advertisement---

கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பருவ மழையின்போது ஏற்பட்ட, மழை, காற்று, நிலச்சரிவு உள்ளிட்டவைகளால் கடும் சேதாரம் ஏற்பட்டது. இதற்கு பொதுமக்களிடமும் பெரிய நிறுவனங்களிலும் கேரள அரசு அனைத்தையும் சரி செய்ய நிதி உதவி கோரியது.

பலர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய நிலையில் குருவாயூர் கோவில் நிர்வாகம் சார்பில் 10 கோடி வழங்கப்பட்டது.

இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர், ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் கோவிலில் இறைவனுக்கென வழங்கும் பணத்தை உங்களை யார் கொடுக்க சொன்னது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபிரசாத் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது,நீதிமன்றம்  கூறிய தீர்ப்பில், ‘தேவசம் போர்டு சட்டங்களை மீறி முதல்வர்  நிவாரண நிதிக்கு  10 கோடி கொடுத்தது குற்றமாகும். பக்தர்கள் அளிக்கும் நன்கொடை மற்றும் கோயில் சொத்துக்கள் அனைத்தும் இறைவன்  குருவாயூரப்பனுக்கு  மட்டுமே சொந்தமாகும். அதை வேறு யாருக்கும் கொடுக்க  உரிமையில்லை. எனவே,  முதல்வர் நிவாரண நிதிக்கு தேவசம் போர்டு அளித்த ₹10 கோடியை அரசு உடனடியாக   திருப்பி கொடுக்க வேண்டும்,’ என  உத்தரவிட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.