---Advertisement---

நச்சுன்னு வந்திருக்கு நல்ல செய்தி ஆபரண பிரியர்களுக்கு…லேட் பண்ணாம கிளம்பிவிடலாமோ நகை வாங்க?…

Published on: July 8, 2024
Gold chain
---Advertisement---

பல இடங்களில் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற நாட்டில் தங்கம் என்பது முதலீட்டு பொருளாக பார்க்கப்படுவதோடு மட்டமல்லாமல் ஆபரணத்திற்காகாவும் அதிகம் பயன்படுத்தப்படும். கல்யாணம் முதல் காது குத்து வரை நடக்கும் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் தங்கம் அணிவது வழக்கமான ஒன்று தான், அதே வேளையில் சீர் வரிசைகளில் தங்கம் முந்தி நிற்கவும் செய்யும்.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இவற்றை கொண்டு தீர்மாணக்கப்படுகிறது தங்கத்தின் விலை. இதானால் தான் ஒவ்வொரு நாளும் விற்பனை விலையில் வித்தியாசம் இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் ஏறுமுகத்தில் இருந்து வந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை.

Bangles
Bangles

இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் சென்னையின் இன்றைய விற்பனை விலை விவரம் வெளியாகி உள்ளது.

நேற்றை விட இன்று கிராமிற்கு இருபது ரூபாய் குறைந்துள்ளது ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலை. இதன் படி ஆராயிரத்து என்னூறு ரூபாயாக உள்ளது (ரூ.6,800/-) ஒரு கிராம் தங்கம். அதே போல சவரனுக்கு நூற்றி அறுபது ரூபாய் குறைந்து ஐம்பத்தி நாலாயிரத்து நானூறு ரூபாய்க்கு (ரூ.54,400/-) விற்கப்படுகிறது. தங்கத்தின் விலையில் வாரத்துவத்திலேயே இறங்கு  முகத்தில் இருப்பது நகை பிரியர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

வெள்ளியின் விற்பனை விலையிலும் வித்தியாசம் இருக்கிறது இன்று. நேற்றை விட கிராமிற்கு இருபது காசுகள் அதிகரித்து தொன்னூற்றி ஒன்பது ரூபாய் ஐம்பது காசாகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது (ரூ99.50/-). ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி ஒன்பதாயிரத்து ஐனூரு ரூபாய்க்கு (ரூ.99,500/_) விற்பனையாகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.