---Advertisement---

தமிழகத்தில் 25 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு… 1-ம் தேதி முதல் அமல்… வெளியான தகவல்…!

By Sri
Published on: August 25, 2024
---Advertisement---

தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்க சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியாளர் கட்டணத்தை உயர்த்த இருப்பதால் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விலை அதிகரிக்க இருக்கின்றது. மேலும் வாகனத்தின் வருகையை பொறுத்து ஒரு பயணத்திற்கு கட்டணம் 5 முதல் 150 வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணை அதிகாரிகள் தெரிவித்திருந்ததாவது “சலுகை ஒப்பந்தத்தின் படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருகின்றது. நெடுஞ்சாலைகள் கட்டணம் விதிகள் 2008 படி மொத்த விற்பனை விலை குழு குறிப்பின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதன்படி மாநிலத்தில் 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அவற்றில் 25 சுங்க சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகின்றது. அதன்படி அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த உயர்வு இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகள் மூலம் 2023-24யில் 4,221 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநில வாரியாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களில் தமிழ்நாடு 5-வது இடத்தில் இருக்கின்றது. உத்தரபிரதேசம் மாநிலம் முதல் இடத்தில் இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க