Vijay Sethupathi - BiggBoss9

பிக்பாஸ் தமிழ் 9: ஆரம்பமே ரணகளம்! விஜய் சேதுபதியுடன் வீட்டுக்குள் சென்ற 20 போட்டியாளர்கள்!

தமிழ் சின்னத்திரையின் பரபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நேற்று (அக்டோபர் 5) கோலாகலமாகத் தொடங்கியது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சீசனை இரண்டாவது முறையாகத் தொகுத்து வழங்க, இந்த வீட்டுக்குள் யார் யாரெல்லாம் வந்திருக்காங்கனு தெரிஞ்சுக்க மக்கள் ரொம்பவே காத்திருந்தாங்க.

இந்த சீசன் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, வெளியே வாழ்க்கையில் நாம பார்க்குற எல்லா விஷயத்தோட ஒரு ‘குட்டி மைக்ரோஸ்கோப்’ மாதிரி இருக்கும்னு நினைக்கலாம். உள்ளே போன ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு பெரிய கனவோட, பெரிய நம்பிக்கையோடதான் வந்திருக்காங்க. ஒருத்தர் வாழ்க்கையில ‘இருட்டு காலம்’னு ஒன்னு இருக்கும்ல, அதை உடைச்சு வெளிய வரணும்னு வந்திருக்கார்ன்னா, இன்னொருத்தர், தான் ஒரு ‘டிரான்ஸ்வுமன்’ங்கிற அடையாளத்தை சமூகம் சாதாரணமாகப் பார்க்கணும்னு வந்திருக்காங்க.

சின்னத்திரை நட்சத்திரங்கள், சமூக ஊடகச் செல்வாக்குள்ள ஆளுங்க (Social Media Influencers), ஸ்டாண்டப் காமெடியன்கள்னு ஒரு கலவையா வந்திருக்கும் இந்த லிஸ்ட்ல, ரசிகர்களோட ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சில முக்கியமான ஆட்கள்:

BiggBoss contestants 9
Bigg Boss Season9
  • விகல்ஸ் விக்ரம்: தன்னோட trademark ‘விகல்ஸ்’ காமெடியால எல்லாரையும் சிரிக்க வைக்கப் போற இந்த ஆசாமி, இந்த சீசனோட டோர் ஓப்பனிங் காமெடின்னு சொல்லலாம். உள்ளே சிரிப்பு சத்தம் குறையாதுன்னு ரசிகர்கள் இப்போதே அடிச்சு சொல்றாங்க.
  • கனி திரு: ‘குக் வித் கோமாளி’ டைட்டில் வின்னர், பார்க்க தான் அமைதியானவங்க. ஆனால், தைரியமான கேரக்டர் இவங்க . சமையல் ரூம் இவங்க கண்ட்ரோல்ல இருக்குமான்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு!
  • வினோத் குமார்: இவருடைய வருகை ஒரு ‘கானா’ ஃபீலை உள்ளே கொண்டு வரும்னு எதிர்ப்பார்க்கலாம். பாட்டு சத்தம் உள்ளே கச்சேரி போடும்னு நம்பலாம்.

இந்த சீசனோட அதிரடி ட்விஸ்ட்:

இந்த முறை 20 போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்திருக்காங்க. ஆனா, டிவிஸ்ட் என்னன்னா, பிக்பாஸ் வீடே ரெண்டு ஜோனா பிரிஞ்சிருக்கு. ஒன்னு, எல்லா வசதியும் உள்ள சூப்பர் டீலக்ஸ் ஏரியா (Super Deluxe Area). இன்னொன்னு, அடிப்படை வசதிகள்கூட கஷ்டமா இருக்கும் சாதாரண வீடு (Normal House). ஆரம்பமே இப்படி ரெண்டு பகுதியா பிரிச்சது ஒரு ‘பவர் கேம்’ ஆரம்பிச்சிருக்கறதுக்கான அறிகுறி.

மக்களுக்காக மக்களால் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்குவது இந்த ஷோவுக்கு ஒரு பலம். அவரு ஒரு விஷயத்தை அழுத்தமா சொல்லும்போதோ, ஒருத்தரோட உணர்வுகளைப் பேசும்போதோ, அது நம்ம வீட்டு பெரியவங்க பேசுற மாதிரி இருக்கும். இந்த 100 நாட்களும் நடக்கப்போற ‘உண்மை விளையாட்டு’க்கு அவர் ஒரு கண்ணாடியா இருப்பாரு.

இப்படி ஆரம்பத்திலேயே தண்ணி இல்ல, ரெண்டு வீடுன்னு, ஆயிரம் சவால்களோட தொடங்கியிருக்க இந்த சீசன், சண்டை, பாசம், சிரிப்பு, கண்ணீர்னு என்னென்னவெல்லாம் காட்டப்போகுதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் இப்போ கண்ணை சிமிட்டாம பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.