தமிழில் பெரும்பாலும் நல்ல திரைப்படங்கள் வருவதே இல்லை அப்படியே வந்தாலும் கதை ரீதியாக ஏதாவது சொதப்பி எடுத்து வைத்து விடுகின்றனர். திரைக்கதை மிக மிக மோசமாக உள்ளது. நடிகர்களின் ரசிகர்கள் இயக்குனர்களின் ரசிகர்கள் இவர்களெல்லாம் ஐடி விங் போல வைத்துக்கொண்டு அந்த படத்தை ப்ரொமோட் செய்கின்றனர் அந்தப் படத்தை பற்றி சரியான விமர்சனம் எழுதினாலும் கூட நீ எப்படி டா எழுதலாம் என்ற வகையில் தான் விமர்சனத்தை எழுப்பி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு கலையரசன் மற்றும் தினேஷ் நடித்த ஒரு படம் வெளியாகி இருந்தது. படத்தின் கதை நல்ல கதை என்றாலும் திரைக்கதை வடிவில் அப்படம் சரியில்லை இது அந்த காலத்திலிருந்து திரைப்படம் பார்க்கும் எல்லோருக்குமே தெரியும். ஆனால் இது போல படங்களை விமர்சனம் செய்தால் கூட உடனே சண்டைக்கு வந்து விடுகின்றனர். எல்லோரும் கதை யோசிக்கலாம் நானும் யோசிக்கலாம் நீங்களும் யோசிக்கலாம் அது நல்ல கதையாக கூட இருக்கலாம் ஆனால் எப்படி எடுக்கிறீர்கள் என்பதில் தான் விஷயம் உள்ளது.
தமிழ் சினிமா எந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. ஒரு காலத்தில் மிக மோசமாக இருந்த கன்னட சினிமா இன்று பான் இந்தியா படங்கள் எடுத்து குவிக்கும் அளவுக்கு முன்னணியில் உள்ளது. ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த தமிழ் சினிமா தற்போது வன்முறை படங்கள் கதைக்களம் இல்லாத படங்கள் என இந்தப் படங்களை மட்டுமே எடுத்து பக்திக்கோ நகைச்சுவைக்கோ இல்ல குடும்ப கதைக்கோ எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோல படங்களை தொடர்ந்து எடுத்து குவித்து வருகின்றனர்.
பெரிய நடிகர்களும் இதுபோல படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகின்றனர்.இது தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கான நல்ல அறிகுறி இல்லை.
அதே நேரத்தில் சில படங்களை தியேட்டரில் போய் பார்ப்பதுமில்லை முக்கிய நடிகர்கள் படங்களை தான் எல்லோரும் தியேட்டரில் சென்று பார்க்கின்றார் கள். கடைசி விவசாயி போன்ற படங்கள் எல்லாம் தியேட்டரில் சென்று பார்த்ததைவிட பின்னாட்களில் ஓ டி டி மற்றும் மொபைல் போன்களில் பார்த்தது தான் அதிகம் இதுபோல சின்ன சின்ன படங்களை எல்லாம் தியேட்டரில் சென்று பார்த்தாலே தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்.

