---Advertisement---

தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் டெஸ்ட் கிட்கள் – உறுதியளித்துள்ள மோடி!

By Sri
Published on: April 20, 2020
---Advertisement---

தமிழகத்துக்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட்கள் வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் உறுதி அளித்துள்ளார் பிரதமர் மோடி.

தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 105 என அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகத்தில் 411 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பிரதமர் மோடியிடம் பேசியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட்கள் வழங்கவேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மோடி ‘நிச்சயமாக வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்திய அரசு மொத்தமாக சீனாவிடம் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வருவத் குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.