அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது இதுவரை இரண்டு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக முன்னாள் அதிபரான டிரம்ப் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றார். இவர் மீது 2 முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. முதல் முறை அரங்கேறிய கொலை முயற்சியில் துப்பாக்கி கொண்டு டிரம்பின் காதை உரசி சென்றது. அப்போது அவர் நூலிலையில் உயிர் தப்பினார்.
அதன் பிறகு தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டி வந்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். இதனால் டிரம்ப் மீது நடத்தப்பட இருந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் தோல்வியில் முடிந்தது.
அதிபர் தேர்தலில் களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப் மீது டொனால்ட் டிரம்ப் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் துப்பாக்கி சூடும் முயற்சி முடிந்த 2 நாட்களில் மீண்டும் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டிருக்கின்றார். 2-வது முறையாக துப்பாக்கி சூடு நடத்த இருந்ததை குறித்து பேசிய டிரம்ப் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நான் நாட்டை காப்பாற்றி விடுவேன் என்று எண்ணி என்னை சுட்டு தள்ள முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கின்றார்.













