---Advertisement---

அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்…அதிமுக…பாஜக இவங்க ரெண்டு பேருக்கு தான் தொடர்பு இருக்கு!…ஆர்.எஸ்.பாரதி விளக்கம்…

Published on: June 24, 2024
R.S.Bharathi
---Advertisement---

கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் தமிழக அரசியல் களத்தை  தீப்பற்றி எரிய வைத்துள்ளது. பல்வேறு கட்சிகளின் கண்டனங்கள், போராட்டங்கள். அரசுக்கு எதிரான விமர்சனங்கள், அதற்கு ஆளும் தரப்பிலிருந்து பதில்கள், எதிர் சவால்கள் என நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து மரணம் நடந்த பிறகு ஒட்டுமொத்த தமிழ் நாட்டின் கவனமுமே கருணாபுரம், மாதவச்சேரி  மீது தான் இருந்து வருகிறது. தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக – பாஜகவிற்கு தொடர்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது என சொல்லியிருக்கிறார்.

கள்ளச்சாராய மரணத்தை வைத்து இந்த இரண்டு கட்சிகளும் அரசியல் ஆதாயம் தேடுகிறது என்றார்.

eps annamalai
eps annamalai

காவல் துறையை தன் வசம் வைத்திருந்த முன்னாள் முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு அந்த துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதா?, அதனால் தான் சிபிஐ விசாரணையை கோருகிறாரா? என கேள்வி எழுப்பினார்.

கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டதுமே தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு நீதி விசாரணை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லாதது போல பழனிசாமி பேசுகிறார் என சாடினார்.

கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரனையை கேட்கும் பழனிசாமி டென்டர் முறைகேடு வழக்கில் நீதிமன்றம் வரை சென்று எதற்காக சிபிஐ விசாரணைக்கு  தடை கோரினார்? என கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!