---Advertisement---

நீங்க ஒன்மோர் சொன்னா நா பேக்அப் சொல்லுவேன்…அஜீத்தின் கோபத்தை பார்த்து பயந்த இயக்குனர்!…

Published on: June 11, 2024
ajith
---Advertisement---

தேவயானிக்காகவே இயக்குனர் ஆனார் ராஜகுமாரன் என்று தான் சொல்லியாக வேண்டும். அந்த அளவுக்கு லவ்வி விட்டார் தேவயானியை. விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ராஜகுமாரன். “சூர்யவம்சம்” படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் உருவானது. அதன் பிறகு வந்த “நீ வருவாய் என” படத்தில் இருவரின் காதல் தீவிரமானது.

ராஜகுமாரன் இயக்கிய படங்கள் எல்லாத்திலேயுமே தேவயானி தான் ஹீரோயின். இப்போது இருவரும் வெற்றிகமான தம்பதியராக வாழ்ந்து வருகின்றார்கள். ராஜகுமாரன் இயக்கிய படங்களில் உருப்படியானது “நீ வருவாய் என” மட்டும் தான் சொல்ல முடியும். மீதி அத்தனை படங்களும் சொதப்பல் தான்.

nee varuvai ena
nee varuvai ena

அஜீத் – பார்த்திபன் என இரண்டு முன்னனி கதாநாயகர்கள் “நீ வருவாய் என”வில். அஜீத்துடன் பணிபுரிந்த அனுபவத்தை ராஜகுமாரன் சொல்லியிருந்த போது அவரின் திறமைகளை கண்டு தான் வியப்படைந்ததாக பேசியிருந்தார். ஒரே டேக்கில் காட்சியை முடித்து விட வேண்டும் என நினைப்பாராம் அஜீத்.

ஒன்-மோர் சொல்லிவிட்டால் அவ்வளவு கோபம் வந்து விடுமாம் அஜீத்துக்கு.  அவர் நடித்த காட்சிகளை எடுக்கும் முன்னர் அதிகம் ஒத்திகை கூட பார்க்க மாட்டாராம். வசனத்தை கேட்பாராம், சீன் பற்றியும் தெரிந்து கொள்வாராம், அடுத்த நிமிடமே டேக் போலாமா என கேட்கக்கூடியவராம் அஜீத்.

இரண்டு மணி நேரங்களுக்கு மேல் தனது கதையை பற்றி அஜீத்திடம் பேசிகொண்டிருந்த போது கூட சிரித்துக்கொண்டே தான் அதனை கேட்டாராம். ப்ரேக் எடுத்து விட்டு கதையை சொல்லும் போது விட்ட இடத்திலிருந்து துவங்கச்சொன்னாராம்.

அவ்வளவு ஆர்வம் காட்டுனாராம் அஜீத் படத்தின் கதையை கேட்கும் போது. “நீ வருவாய் என” வெற்றிக்கு பிறகு அஜீத்தை வைத்து மீண்டும் இயக்க வந்த வாய்ப்பை ராஜகுமாரன் மறுத்துவிட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!