---Advertisement---

கண்டிசன் போட்ட முருகதாஸ்…கட்டுப்பட்ட சிவகார்த்திகேயன்…தள்ளிப்போகுமா அமரன் ரிலீஸ்?…

Published on: April 13, 2024
sivakarthikeyan murukadass
---Advertisement---

சிவகார்த்திககேயன் ராணுவ வீரராக இவர் நடித்து வரும் “அமரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது விரைவாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் இப்படி இருக்க விஜயகாந்த், அஜீத், விஜய், ரஜினி , சூர்யா என தமிழ்  திரை உலகின் முன்னணி கதாநாயகர்களை வைத்து படங்கள் எடுத்து, அதில் அதிகமாக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

பாலிவுட்டிலும் படங்கள் எடுத்து வரும் இவர், அகில இந்திய அளவில் தனக்கென ஒரு புகழை பெற்று வருகிறார். சல்மான்கானுடன் இவர் கைகோர்த்து உள்ள படத்திற்கான பெயர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

“சிக்கிந்தர்” என்கின்ற அந்த படத்தின் வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறமோ சிவகார்த்திகேயனை வைத்தது முருகதாஸ் இயக்கி வரும் தமிழ் படத்திற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

sivakarthikeyan
sivakarthikeyan

 

முருகதாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனை அவர் நடித்து வரும் மற்றொரு படமான “அமரன்” படத்தை விரைந்து முடித்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். முருகதாஸின் கவனத்திற்கு வந்த இந்த கோரிக்கையை கேட்டு தனது படத்தில் நடித்து முடித்த பிறகு தான் சிவகார்த்திகேயன் வேறு படங்களுக்கு செல்வார் என சொல்லிவிட்டாராம்.

“அமரன்” படப்பிடிப்பில் இருப்பது நாட்கள் மட்டும் தான் நடிக்க தேவைப்படுமாம். அனால் இந்த இடைவேளிக்குள் சிவகார்த்திகேயனின் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏதும் வந்து விட்டால் தனது படத்தின் கதாப்பாத்திரத்தை அது பாதிக்கும் என கூறி மறுப்பு தெரிவித்தாராம்.

மேலும் சிவகார்த்திகேயன் தனது படங்களில் இதுவரை பயன்படுத்தி வந்த ‘பாடி லாங்குவாஜ்’  முருகதாஸின் படங்களில் இருக்காதாம். இதனால் முருகதாஸ் பட கதாபாத்திரம் முந்தைய படங்களை விட சற்று வித்தியாசமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் , முருகதாஸிடம் உதவி இயக்குனராக பனியாற்றிய தேசிங்கு பெரியசாமியே “அமரன்” படத்தை இயக்கி வருகிறார்.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Music composer Sam CS working with international artists in a studio for Mahavatar Parshuraam movie.

Mahavatar Parshuraam : “இசையை வைத்தே உருவாகும் படம்” – உலகம் முழுவதிலும் இருந்து 250 கலைஞர்களைத் திரட்டிய சாம் சிஎஸ்; மிரட்டலான இசைக்குத் தயார்!

Actor VTV Ganesh expressing his support for Thalapathy Vijay and TVK party during an interview.

TVK Support : “எனது ஓட்டு விஜய்க்கு தான்” – வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த விடிவி கணேஷ்; அரசியல் களத்தில் பரபரக்கும் தளபதி ரசிகர்கள்!

A collage showing Kichcha Sudeep from his movie Max and director Cheran.

Cheran vs Sathya Jyothi : “சுதீப் படம் நின்னதுக்கு சேரன் தான் காரணமா?” – அட்வான்ஸ் தொகையைத் திரும்பக் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்; கோலிவுட்டில் பரபரப்பு!

A symbolic graphic representing the power imbalance and casting couch issues in the film industry as discussed by JD Chakravarthy.

Industry Secrets : “அவர் தாத்தா வயசு.. ஆனால் பேசியது அசிங்கம்” – பிரபல நடிகை வீட்டில் படுக்கைக்கு அடியில் ஒளிந்திருந்த ஜேடி சக்ரவர்த்தி; உடைக்கும் அதிர்ச்சி உண்மைகள்!

Music maestro Ilaiyaraaja composing for the upcoming movie Valmiki Ramayana directed by Bhavna Talwar.

Valmiki Ramayana : “ராமாயணத்திற்கு இசையமைக்கும் இசைஞானி” – இளையராஜா – ஆனந்த் நீலகண்டன் கூட்டணியில் புதிய காவியம்; ரிலீஸ் எப்போது?

Actor Salman Khan and Director Vamshi Paidipally at the official pooja ceremony of their new film produced by SVC.

Salman – Vamshi : “சல்மான் கான் – வம்சி பைடிபள்ளி கூட்டணியில் மெகா புராஜெக்ட்” – மும்பையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; தில் ராஜுவின் பிரம்மாண்ட தயாரிப்பு!