நவராத்திரி 9 நாட்களும் பத்தாவது நாளுடன் வரும் விஜய தசமியும் சேர்த்து தசரா விழாவாக மைசூருவில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும். இந்தியாவிலேயே மிகப்பெரிய விழாவாக தசரா விழா மைசூருவில் கொண்டாடப்படுகிறது.
மைசூர் அரண்மனையே அலங்கரிக்கப்பட்டு 10 நாட்களும் களை கட்டும் தசரா விழாவை பார்க்க இரு கண்கள் போதாது அந்த அளவு தத்ரூபமாக இருக்கும் இந்த விழாவுக்கு கர்நாடக மக்கள் அனைவரும் அடிமை என்றே கூறலாம்.
ஆண்டுதோறும் மைசூர் அரண்மனையில் நடக்கும் இந்த விழா இந்த வருடம் கொரோனா பிரச்சினையால் எளிமையாக நடக்கிறது.
இந்த ஆண்டு தசரா விழா வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது.
தற்போது மைசூரு, பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கர்நாடகாவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.
கரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. யானை சவாரி ஊர்வலம்,போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளைத் தவிர்த்துள்ளது அரசு.
பிற நிகழ்ச்சிகள் அனைத்தைம் ரத்து செய்யப்பட்டு. மைசூரு நகர் முழுவதும் நடக்கும் ஜம்பு சவாரி எனும் யானை சவாரி அரண்மனை வளாகத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைசூர் அரண்மனையின் மகாராணி பிரமோத தேவி, ”கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு மைசூரு அரண்மனையில் நடக்கும் தசரா சம்பிரதாய, சடங்குகளை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அர்ச்சகர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.













