தமிழ் சினிமாவில் எப்போதுமே தியேட்டர் ரிலீஸில் மட்டுமில்லாமல் ஓடிடி தளங்களிலும் தங்களது படங்களின் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனை மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய மைல்கற்களை உருவாக்குபவர் தான் நம்ம வண்டர்பார் நாயகன் நடிகர் தனுஷ். அந்த வரிசையில், போர்தொழில் பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் மற்றும் மமிதா பைஜு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான திரைப்படம் தான் கர. இப்போ இந்த படம் தியேட்டர்களைத் தொடர்ந்து ஓடிடி உலகிலும் ஒரு மாஸான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த மே 28 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் மிக பிரம்மாண்டமாக ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கப்பட்ட இந்த கர திரைப்படம், தற்பொழுது டிஜிட்டல் தளங்களில் மிக பயங்கரமான அலையை உருவாக்கியுள்ளது. வெளியான முதல் வார இறுதி நாட்களிலேயே சுமார் 3.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று நெட்பிளிக்ஸ் தளத்தையே ஒட்டுமொத்தமாக அதிர வைத்துள்ளது.

அதைவிட ஒரு ஸ்பெஷலான மேட்டர் என்னவென்றால், கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ஒட்டுமொத்த கோலிவுட் திரைப்படங்களின் தொடக்க வார இறுதிப் பார்வையாளர்களின் கணக்கீட்டின்படி, நம்ம தனுஷின் கர திரைப்படம் தற்பொழுது 3வது இடத்தைப் பிடித்து மாஸ் காட்டியுள்ளது. தியேட்டர்களில் ஆக்ஷன் மற்றும் எமோஷனல் கதைக் களத்துடன் கலக்கிய இந்த படம், இப்போ ஓடிடி உலகிலும் ரசிகர்களால் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு திருடன் தனது குடும்பத்திற்காகவும், வங்கியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காகவும் எப்படி போராடுகிறான் என்ற விறுவிறுப்பான கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா மிகவும் எதார்த்தமாக இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் இந்த படத்திற்குப் பெரிய பலமாக அமைந்தது. தியேட்டர்களில் இந்த படத்தை மிஸ் செய்த பல சினிமா பிரியர்கள் தற்பொழுது தங்களது வார இறுதி நாட்களில் நெட்பிளிக்ஸ் தளத்தில் கர திரைப்படத்தைத் தேடித்தேடிப் பார்த்து வருவதால், இதன் ஓடிடி பார்வையாளர்களின் எண்ணிக்கை வரும் நாட்களிலும் இன்னும் பல மடங்காக எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













