---Advertisement---

தள்ளிப்போகுமா தனுஷ் படம் ? படக்குழு அறிவிப்பு !

By Sri
Published on: March 20, 2020
---Advertisement---

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது அவர் நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற படம் ரிலிஸூக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் தஞுஷ் சுருளி என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து படம் மே 1 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ’அவன் சீக்கிரம் வருகிறான்’ என ஒரு டிவிட்டைப் போட்டுள்ளார். இதன் மூலம் மே 1 ஆம் தேதிக்கு முன்னதாக இந்த படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

ஆனால் இப்போது கொரோனா பீதி காரணமாக இந்த படம் சொன்ன தேதியில் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.