கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் தர்ஷன். இவரின் தோழி பவித்ரா கௌடா. தர்சனின் ரசிகரான ரேணுகா சுவாமி பவித்ரா கௌடாவுக்கு பாலியல் தொடர்பான மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் தர்ஷன் பவித்ரா கௌடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்து வைத்திருக்கின்றார்.
போலீஸ் விசாரணையில் தர்ஷன் பவித்ரா கௌடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்தார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில் நடிகர் தர்ஷன் சிறை வளாகத்திற்குள் கையில் சிகரெட், காபி குவலையுடன் தனது மேலாளர்கள் மற்றும் இரண்டு சிறை நண்பர்களுடன் சொகுசாக சேர் போட்டு அமைந்திருக்கும் புகைப்படம் வெளியாகிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வரும் நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு இப்படி வசதிகளா? அதிகாரிகள் துணை இன்றி இது நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தும் என்று கர்நாடகா சிறைத்துறை டிஜிபி மாலினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருக்கின்றார். மேலும் நடிகர் தர்ஷன் சிறைக்குள் இருந்தபடி வீடியோ காலில் பேசும் காணொளியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. 25 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில் திரை துணியால் மறைக்கப்பட்ட சிலை அறையில், மஞ்சள் டீ சர்ட் அணிந்து அமர்ந்திருக்கும் தர்ஷன் நண்பர் ஒருவருடன் பேசும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
https://twitter.com/sumitduhan2001/status/1827773460350751087







