---Advertisement---

அண்ணனுக்கு தண்ணி கொடு…ரசிகர்களை தாகத்தில் தவிக்க வைத்தாரா இந்தியன் தாத்தா?…விமர்சித்த பிரபலம்…

Published on: June 3, 2024
indian 2
---Advertisement---

கமல்ஹாசன் சங்கர் கூட்டணியில் வெளியாகி மிகப்பிரமாண்டமான வெற்றியை பெற்று இருந்தது “இந்தியன்” முதல் பாகம். அதே எதிர்பார்ப்போடு திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது “இந்தியன் – 2”.

லைக்கா புரொடக்ஷன்ஸ் படத்தினை தயாரித்திருக்க , அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இரண்டு லிரிக்கல் வீடியோக்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஒன்றாம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து மிக விமர்சியாக நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்க கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் மாணவ – மாணவியரின் கூட்டம் அலைமோதியதாம் .

“ஜெய்லர்” படத்தின் இயக்குனர் நெல்சன், கமல்ஹாசனின் முந்தைய வெற்றி படமான “விக்ரம்” படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பங்கேற்று விழா மேடையை அலங்கரித்தனர்.

indian-2
indian-2

“தக்-லைஃப்” பட சூட்டிங்கிலிருந்து நேராக வந்ததால் தாமதமானதாக சிம்பு மேடையில் பேசும்போது கூறியிருந்தார். குறித்த நேரத்தில் நிகழ்ச்சி துவங்கப்படவும் இல்லையாம், அதேபோல குறித்த நேரத்தில் நிகழ்ச்சி முடிவடையவில்லையாம்.

விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்கள் எல்லாம் நிகழ்ச்சி முடிந்ததும் தங்களது காரில் ஏறி சொகுசாக பயணிக்க சாமானியர்களின் கதி தான் அல்லோலபட்டதாம். மாலை ஆறு மணிக்கு முன்னரே கூட்டம் கூட, விழா முடிய நள்ளிரவு வரை ஆனதாம்.

நிகழ்ச்சியை காண வந்த “இந்தியன் – 2” தாத்தாவின் ரசிகர்களுக்கு சரியான முறையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என வருத்தத்தோடு சொல்லி இருக்கிறார் பிரபல சினிமா விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது தண்ணீருக்காக தவித்தவர்கள் தான் ஏராளம் எனவும் ஆதங்கப்பட்டு இருந்தார் அவர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!