---Advertisement---

போகலாமா…வேண்டாமா குற்றாலத்துக்கு?…இன்றைய சீசன் நிலவரம்…

Published on: July 16, 2024
Courtallam
---Advertisement---

குற்றாலத்தில் நேற்று முன்தின இரவிலிருந்தே அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டியே வருகிறது தண்ணீர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூட்டம் கூடியது. அலைமோதிய மக்கள் கூட்டத்தினால் ஸ்தம்பித்தது குற்றாலம். ஆனால் நேற்று அதிகாலையிலிருந்தே நிலைமை தலைகீழாகத்தான் இருந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருந்தது. அதே போல மழை பெய்துள்ளது. இதனால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது,  இன்ப சுற்றுலா வந்த பயணிகளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

Falls
Falls

அளவு கடந்து கொட்டிய தண்ணீரால் பாதுகாப்பு காரணங்களால் பொது மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று  முழுவதுமே குற்றாலத்தில் இதமான காற்று, சிலு, சிலு சாரல் ரம்மியமான சூழலே இருந்தது.

ஆனால் குளிக்க விடுக்கப்பட்டிருந்த தடையினால் இந்த இயற்கை கொஞ்சும் குற்றாலத்தின் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பினர் சுற்றுலாப் பயணிகள்.

இன்று அதே நிலை தான் நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கம், குறைவே இதமான தென்றல் காற்று, அவ்வப்போது விழுந்து வந்த சாரல் என மனதை மயக்கும் நிலையில் தான் குற்றாலம் இருந்து வந்தது இன்று கால பத்து மணி வரை.

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று காலை பத்து மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. விரைவில் இந்த நிலை மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க விடப்பட்டுள்ள தடை விரைவில் நீக்கப்படும்  என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!

Box office collection report for GDN and DC opening day.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: வசூலில் பின் தங்கிய மாதவனின் ‘ஜிடிஎன்’ மற்றும் நல்ல தொடக்கத்தைப் பெற்ற ‘டிசி’!