---Advertisement---

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்… ராகுல் காந்தி அழைப்பு…!

By Sri
Published on: September 30, 2024
---Advertisement---

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் மற்றும் முடிவு எடுப்பதில் பெண்களுக்கு சம பங்களிப்பு வழங்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக சக்தி அபியான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல் பெண்களின் குரலை வலுப்படுத்தவும் சமூகத்தில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தவும்.

இந்திரா தோழமை அமைப்பு என்ற திட்டத்தையும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலமாக அதிகளவில் பெண்கள் அரசியலில் அடி எடுத்து வைக்கும்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது: “அரசியலின் பெண்களின் குரலை வலுப்படுத்தும் நோக்கில் ஓர் ஆண்டுக்கு முன்பு இந்திரா தோழமை அமைப்பை தொடங்கியிருந்தோம்.

இன்று இந்த முயற்சி பெண்களின் தலைமைத்துவத்துக்கான சக்தி வாய்ந்த இயக்கமாக இருக்கின்றது. உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிக பெண்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள். உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆர்வமாக இருக்கும் பெண்கள் அனைவரும் சக்தி அபியான் என்ற திட்டத்தில் சேர்ந்து பங்கேற்பாளர்களாக மாறுங்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Attakathi Dinesh Receives Major Remuneration Boost!

இதன் மூலம் வலுவான அடிமட்ட அமைப்புகளை உருவாக்கலாம். அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தலாம். எங்களுடன் சேர்ந்து இன்றே இந்த திட்டத்தில் இணையுங்கள். கிராமம் முதல் ஒட்டுமொத்த தேசம் வரை இணைந்து மாற்றத்தை செயல்படுத்துவோம்” என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!