---Advertisement---

இஸ்லாமிய சகோதரர்களுக்கு… முதல்வர் மு.க.ஸ்டாலின் மிலாடி நபிக்கு வாழ்த்து…!

By Sri
Published on: September 16, 2024
---Advertisement---

இஸ்லாமிய சகோதரர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்ததாவது “நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாடி நபி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதர்களிடையான வேற்றுமைகளை களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம். அவரது போதனைகள் அமைதியான சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும். உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உளறும் முன்பே கொடுத்து விடுங்கள் என்று எளியவர்களுக்காக பேசியவர்.

உங்களை நீங்களே பெருமைப்படுத்தி கொள்ள வேண்டாம் என பணிவுடமையை வலியுறுத்தியவர். “கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர்” என வாழ்க்கைக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டினார். அவர் காட்டிய வழியில் வறியவர்க்கு உதவுவது, இயற்கைச் சீற்றம், பெருந்தொற்று உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் தன்னலமற்று மக்களுக்காகச் சேவையாற்றுவது, பசித்தோருக்கு உணவளிப்பது என இசுலாமிய மக்கள் வாழ்ந்து சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகின்றனர்.

அத்தகைய இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துக்கள். இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களின் சகோதரனாக என்றும் நிற்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில் மீண்டும் எனது மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!

Actress Trisha Krishnan thanking Upasana Konidela on Instagram for sending a special hamper filled with traditional homemade Telugu food and pickles.

மெகா குடும்பத்தில் இருந்து வந்த சர்ப்ரைஸ் பாக்ஸ்; நள்ளிரவில் உருகிய நடிகை திரிஷா.. பின்னணியில் இருக்கும் சுவாரசிய சங்கதி!

Tamil actor and director Parthiban presenting a special handwritten poem letter to Tamil Nadu CM Vijay during their recent official meeting

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பார்த்திபன் காகிதத்தில் எழுதிய அந்த வார்த்தைகள் என்ன தெரியுமா?