வட போச்சே… ஜாமின் வாங்கியும் வேஸ்ட்… ஜானி மாஸ்டரின் தேசிய விருது நிறுத்திவைப்பு..!

வட போச்சே… ஜாமின் வாங்கியும் வேஸ்ட்… ஜானி மாஸ்டரின் தேசிய விருது நிறுத்திவைப்பு..!

ஜானி மாஸ்டரின் தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவர் மீது கடந்த மாதம் 21 வயதான பெண் நடன கலைஞர் பாலியல் புகார் கொடுத்தார். இதனால் ஜானி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜானி மாஸ்டரை போலீசார் ஒரு வழியாக தேடி கண்டுபிடித்தனர். அவரை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் புகார் கொடுத்த பெண் மைனராக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து தேசிய விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜானி மாஸ்டர் ஜாமின் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமின் பெறுவதற்கு இரண்டு லட்சத்திற்கான உத்தரவாதத்தை இரண்டு பேர் அளிக்க வேண்டும்.

ஊடகங்களில் எந்தவித போயாட்டியும் கொடுக்கக் கூடாது. மற்றொரு இடைக்கால ஜாமின் பெறக்கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஜானி மாஸ்டருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து நாளை மறுநாள் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடக்க உள்ள நிலையில் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காத’ பாடலுக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.