இந்திய அளவில் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அத்தியவாச பொருட்களை தவிர்த்து வணிக வளாகங்கள் முதல் கல்வி நிலையங்கள் வரை முடக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஒரு சில மாவட்டத்தில் மட்டும் சிக்கன் மட்டன் கடைகளை வார இறுதியில் ஊருக்கு வெளியில் அரசு நியமிக்கப்பட்ட இடத்தில் விற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனால் சிக்கன் மட்டன் விலை பெருமளவில் விலை ஏற்றதுடன் இருந்தது. சிக்கன் விலை கிலோ 300 முதல் 400 ரூபாயாகவும், மட்டனின் விலை கிலோ 1200 முதல் 1400 ரூபாயாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில், சில நாட்களாக உச்சத்தில் இருந்த சிக்கன் மட்டன் விலை அதிரடியாக குறைந்துள்ளது. திடீரென்று யாரும் எதிர்பாராதவிதமாக, சென்னையில் சிக்கனின் விலை 200 ரூபாயாகவும் மட்டனின் விலை 800 ரூபாய்க்கும் குறைந்துள்ளது.









