---Advertisement---

அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4ல் மீண்டும் ஆஜராகனும்… நீதிமன்றம் உத்தரவு…!

By Sri
Published on: September 30, 2024
---Advertisement---

அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்கள்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி பலமுறை மனு தாக்கல் செய்திருந்தார். இதை அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாகத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை கலைக்க கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். வாரத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று செந்தில் பாலாஜி முதல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருக்கின்றார். அதன்படி வருகிற அக்டோபர் நான்காம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!

Prominent Kollywood directors Mohan Raja and Shakthi Soundar Rajan working on sequel scripts.

தனி ஒருவன் 2 மற்றும் மிருதன் 2: மிரட்டலான சீக்வெல் படங்களின் ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரம்!

Actor Karthi and director PS Mithran discussing a scene during the production of Sardar 2.

சர்தார் 2 புதிய ஜானர் படம்: இயக்குனர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தியின் சுவாரஸ்யமான பேட்டி!

Official announcement banner featuring Keneeshaa's musical debut for An Ordinary Man.

கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!

Official first look poster for Shivarajkumar's upcoming film Picasso.

ஹட்ரிக் நாயகன் சிவராஜ்குமாரின் ‘பிகாசோ’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Official promotional still released by RKFI revealing Seeman's appearance in Seyon.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைகிறார் செந்தமிழன் சீமான்!