தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி இருக்கின்றது. இதையடுத்து 2 தினங்களில் வடக்கு வடமேற்கு திசையில் நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
மேலும் தமிழகத்தில் குறிப்பாக 4 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.













