---Advertisement---

கோவிட் 19 தொற்று சிகிச்சை – நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட செவிலியர்கள்!

By Sri
Published on: April 6, 2020
---Advertisement---

பிரான்ஸ் நாட்டில் மருத்துவப் பணியாளர்களை உரிய பாதுகாப்பு இல்லாமல் நோயாளிகளிடம் அனுப்புவதாக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதுகாப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரான்சில் இதுவரை 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,507 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்ப்பட்டவர்களை அந்நாட்டின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் மருத்துவப் பணியாளர்கள் தங்களை நோயாளிகளிடம் நிர்வாணமாக அனுப்புவதாகக் குற்றச்சாட்டை தங்கள் நிலையை உணர்த்தும் விதமாக  நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். #aPoilcontrelecovid (கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக) என்ற ஹேஷ்டேக்கயும் உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

விஜய் மற்றும் அஜித் பற்றிப் பேசும் இயக்குனர் எச்.வினோத்.

True Stars Revealed: Vinoth Praises! – விஜய், அஜித் மனிதாபிமானம்: எச்.வினோத் நெகிழ்ச்சி!

Director Atlee praises the Ramayana trailer.

Atlee’s Epic Praise: Ramayana Trailer Blows Everyone Away! – ராமாயணம் டிரெய்லர்: அட்லீயின் அதிரடிப் பாராட்டு! வியந்துபோன இயக்குனர்!

Advance bookings open for JanaNayagan movie.

Booking Fever: JanaNayagan Hits Theaters! – முன்பதிவு சூடுபிடித்தது! ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட் – பிரீமியர் ஷோக்கள் எப்போது?

Actress Aishwarya Lekshmi quits social media platforms.

Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Thalapathy Vijay's Thirupaachi re-releasing in theaters.

Thirupaachi Re-Release Confirmed! – மெகா பிளாக்பஸ்டர் மீண்டும் வருகை! திரையரங்குகளில் ரிலீசாகிறது தளபதியின் ‘திருப்பாச்சி’!

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!