புரட்டாசி மாதம் நேற்றைய தினமான 17.09.2021 அன்று பிறந்தது. இன்று புரட்டாசி மாதம் வரும் முதல் சனிக்கிழமை. புரட்டாசி மாதம் முழுவதும் பல இடங்களில் இறைச்சியை தவிர்த்து சைவ உணவு உண்பது மட்டுமே பழக்கமாயுள்ளது. இந்த மாதத்தில் அசைவ உணவுக்கு பல வீடுகளில் தடைதான்.
திருப்பதி பிரமோற்சவம் இந்த மாதம் தான் நடைபெறும். தற்போது கொரோனாவை ஒட்டி பல முக்கிய கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் வழக்கமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய வைணவ ஆலயங்கள் தமிழ்நாடெங்கும் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர்.
புரட்டாசி சனிக்கிழமையன்று அதிகாலையிலேயே மக்கள் கூட்டத்தை கோவில்களில் அதிகம் காண முடியும் தற்போது கோவில்கள் அடைத்து இருப்பதால் மக்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கின்றனர்.













