---Advertisement---

வீரர்களின் சம்பளப் பாக்கியை மொத்தமாக கொடுத்த பிசிசிஐ!

By Sri
Published on: April 11, 2020
---Advertisement---

பிசிசிஐ தனது வீரர்களுக்கான சம்பளத்தை மொத்தமாக இப்போதே கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6700 ஆக உள்ளது.

கொரோனாவால் இந்திய அணி விளையாட இருந்த பல கிரிக்கெட் தொடர்கள் தள்ளிப்போயுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது. போட்டிகள் நடக்காததால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகளவிலான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலமையை சமாளிக்க வீரர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை பிசிசிஐயின் பொருளாளர் மறுத்திருந்தார். அனைவரின் நலத்தையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அனைத்து வீரர்களின் அனைவரின் சம்பள பாக்கியையும் மொத்தமாகக் கொடுத்துள்ளது. இது சம்மந்தமாக ‘நெருக்கடியான இந்த சமயத்தில் எந்த ஒரு வீரரும் அவதிப்பட விடமாட்டோம்’ தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை – டிவிட்டரில் மகிழ்ச்சி !

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!