தமிழ் மற்றும் தென்னிந்திய ஓடிடி ரசிகர்களிடையே தற்பொழுது அதீத சஸ்பென்ஸ் மற்றும் மனித மனங்களை உலுக்கும் வித்தியாசமான திரைப்படங்களுக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தியேட்டர்களில் வெளியாகும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட திரைப்படங்களை ஓடிடி தளங்களில் தேடித் தேடிப் பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த வரிசையில், தற்பொழுது தியேட்டர் ரிலீஸைத் தொடர்ந்து மிகவும் குறுகிய கால இடைவெளியில் ஓடிடிக்கு வரவிருக்கும் ஒரு இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் சைகலாஜிக்கல் ரொமாண்டிக் சஸ்பென்ஸ் திரைப்படம் தான் அக்லி ஸ்டோரி.
சின்னாரி பெள்ளிகூத்து சீரியல் மூலமாக ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகை அவிகா கோர் மற்றும் நடிகர் நந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் தான் அக்லி ஸ்டோரி. அறிமுக இயக்குநர் பிரணவ் ஸ்வரூப் இயக்கத்தில் உருவான இந்த படம் சமீபத்தில் தான் தியேட்டர்களில் ரிலீஸானது. மனிதர்களின் பேராசை, அதீத பொசசிவ்னஸ் மற்றும் உறவுகளுக்குள் இருக்கும் நச்சுத்தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த விறுவிறுப்பான படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போ இந்த படம் பத்தின ஒரு முக்கியமான ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல முன்னணி ரீஜனல் ஓடிடி தளமான ஆஹா, இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அதன்படி, இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜூன் 5 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மிக முக்கியமாக, இந்த படம் தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் ஆஹா தமிழ் தளத்தில் முறையான தமிழ் டப்பிங் வெர்ஷனுடன் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
படத்தில் ஒரு சைக்கோ குணாதிசயம் கொண்ட கணவராக நந்துவும், அவரிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் மனைவியாக அவிகா கோரும் தங்களது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்று சினிமா வட்டாரங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தியேட்டர்களில் இந்த படத்தை மிஸ் செய்த சினிமா பிரியர்கள் மற்றும் மைண்ட் கேம் கதைகளை விரும்பும் ஓடிடி வாசிகள் இந்த வார இறுதியில் ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகப்போகும் அக்லி ஸ்டோரி திரைப்படத்தைக் காண தற்போதே செம ஆவலோடு காத்துக்கிட்டு இருக்காங்க.













