---Advertisement---

இசை என்பது தண்ணீரை போன்றது- ஏ.ஆர் ரஹ்மான்

Published on: September 30, 2020
---Advertisement---

பிரபல கர்நாடக சங்கீத இசை பாடகி சுதா ரகுநாதன் இவர் புதிதாக ஒரு யூ டியூப் சேனல் தொடங்கியுள்ளார். இந்த சேனலுக்கு பல பிரபலங்கள் பேட்டி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் இந்த சேனலுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

இதில் ஏ.ஆர் ரஹ்மான் கூறியது என்னவென்றால்,

”இசை என்பது தண்ணீரை போன்றது. அது காலத்துக்கு ஏற்பத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும். திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றின் கதைக்களங்கள் போக்கு மாற்றமடைந்து விட்டதால் பாடல்கள் அதிகம் வருவதில்லை குறைந்துவிட்டன.

உலகமும் மாறிக் கொண்டிருந்தது. இயக்குநர்களும் இசை ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் இசைக்கான சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும்.

அதே நேரம் அதிக நுணுக்கங்கள் இருந்தாலும் பார்வையாளர்களைப் போரடித்துவிடும். கடந்த ஆறேழு வருடங்களாக இசை குறித்த ஆய்வை மேற்கொண்டு, என் தயாரிப்பில் வரும் முதல் திரைப்படமான ’99’ சாங்ஸ் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறேன். அது வெளியான பிறகே ஆர்வத்துடன் அடுத்தடுத்த விஷயங்களைச் செய்ய இயலும்”.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க