கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாராயம் குடித்ததால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
‘மெத்தனால்’ கலந்த சாராயத்தினால் தான் இந்த சோகம் நடந்ததாக தெரியவந்தது. பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து சிகீட்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசின் சார்பில் நிவாரணம் அறிவிப்பட்டும் உள்ளது. நடிகரும், கட்சி தலைவருமான விஜய் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இந்த சோக சம்பவத்தால் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

இந்நிலையில் செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா வெளியிட்ட பதிவு ஒன்று சர்ச்சைக்குள்ளானது. ‘நாட்டுக்காக பார்டருக்கு போனப்போ, டெரரிஸ்ட் அட்டாக்ல நேருக்கு நேர் நெஞ்சில குண்டு பாய்ஞ்சு ஆஸ்பிட்டல்ல படுத்திருக்காங்க’.
இது தான் அவர் போட்ட பதிவு. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வந்து விஜயைதான் அட்டாக் பண்ணியிருக்கார் என செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அனிதா சம்பத். தனது பதிவு விஜயை குறி வைத்து என சொல்வது தவறு.
எனது பதிவில் எந்த இடத்திலும் அவரை பற்றி குறிப்பிட வில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள், அதனால் பாதிப்பிற்குள்ளானவர்களை பற்றி தான் பதிவிட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார்.
இறந்தவர்களை விட அவர்களது மனைவி, குழந்தைகள் தான் பாவம். இப்படி ஊதாரி தனமாக செய்து விட்டதால், இப்போது பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் குடும்பங்கள் தான்.
இது போல் சம்பவங்கள் இனி நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு இந்த விஷயத்தில் மீடியா தான் தேவைலயில்லாத பில்டப் கொடுப்பதாக மட்டும் தான் சொல்லியிருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளார் அனிதா சம்பத்.













