அதிமுக- பாஜக கூட்டணியா

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது அதிமுக. அந்த தேர்தலில் இந்திய அளவில் பாரதியா ஜனதா முன்னணியில் வந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக இணைந்து செயல்படுமா என கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

இதுவரை இரு கட்சிக்குமே ஒற்றுமையான அணுகுமுறைதான் உள்ளது. ஆனால் பாரதிய ஜனதா துணைத்தலைவர் போன்றோரின் பேச்சுக்கள் அதிமுகவை சீண்டும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருமா சேராதா என்பதை இன்னும் 3 தினங்களில் பாரதிய ஜனதா தலைவர் முருகன் அறிவிக்க இருக்கிறார்.