---Advertisement---

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்

Published on: March 9, 2021
---Advertisement---

தேமுதிக ஆரம்பித்த காலத்தில் யாருடனும் கூட்டணி இல்லை என்ற கொள்கை முடிவில் உறுதியாக இருந்தார் விஜயகாந்த். இருந்தாலும் தொண்டர்கள், மக்கள் பத்திரிக்கையாளர்கள் என தொடர்ந்து கூட்டணியை விரும்பியதால் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார்.

முதலில் அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்த விஜயகாந்த் பின்பு கூட்டணியில் இணைந்த உடன் அமைதியானார். பின்பு அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் முதல்வருமாகிய ஜெயலலிதாவிடம் கடுமையான போக்கை கடைபிடித்தார்.

பிறகு வந்த எடப்பாடி, மற்றும்  பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்ட விஜயகாந்த் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் கூட்டணியாக இணைந்து செயல்பட்டனர்.

இந்நிலையில் தற்போதைய சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தேமுதிகவின் முக்கிய தலைவரான சுதீஷ் அறிவித்துள்ளார். இன்றுதான் தேமுதிகவுக்கு தீபாவளி எனவும் குறிப்பிட்டுள்ளார். கேட்ட எண்ணிக்கையில் தங்களுக்கு தொகுதி தராததால் தான் இந்த முடிவு என சுதீஷ் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.