தமிழில் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமானவர் ஷார்மி. இந்த படத்துக்கு பிறகு பெரிய அளவில் தமிழில் சோபிக்காத ஷார்மி தெலுங்கில் முன்னணி நடிகையானார். பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.
தமிழில் லாடம் 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.ஹைதராபாத்தில் இவர் வசித்து வருகிறார். இவரின் பெற்றோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கவலையடைந்துள்ள இவர் சமீபத்தில் ஏற்பட்ட ஹைதரபாத், மழை வெள்ளத்தினால் சீதோஷ்ண நிலையினால் என் பெற்றோர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.
நான் டாக்டர்களை கடவுள் போல மிகவும் நம்புகிறேன் என சார்மி கூறியுள்ளார்.







