இறுதிசுற்று, சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை முதலிய தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ரித்திகா சிங். இவர் இந்தி, தெலுங்கு முதலிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகை என்ற பிரபலத்தை தாண்டி கலப்பு தற்காப்பு கலைஞரும் ஆவார்.
இவரின் தமிழ் படமான இறுதிசுற்று, ஹிந்தியில் சாலா கதூஸ் மற்றும் தெலுங்கில் குரு என்ற மூன்று மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து பிலிம்பேர் விருதை மூன்று முறை வென்றுள்ளார்.
எப்பொழுதும் தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களை தன் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்திலில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B-KS1csgIbB/?utm_source=ig_embed&utm_campaign=loading
அதனை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவை கலாய்த்து வருகிறார்கள். அதில் ரசிகர்கள் சிலர் என்ன சிம்ரன் இதெல்லாம் என்ற வடிவேல் பாணியிலும் ஒரு சிலர் கொரோனா ஸ்டேஜ் என்றும் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.








