---Advertisement---

தைரியம் இருந்தா செருப்பை எடுத்துட்டு வா… நான் தொடப்பத்தை எடுத்துட்டு வரேன்… நடிகை ராதிகா ஆவேசம்..!

By Sri
Published on: August 31, 2024
---Advertisement---

நடிகர் விஷாலுக்கு தைரியம் இருந்தால் நடிகைகளை தரக்குறைவாக பேசிய Youtubeபரை செருப்பால் அடிக்கட்டும் என்று ஆவேசமாக பேசியிருக்கின்றார்.

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள திரையுலகமே மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கின்றது. மலையாள சினிமாவில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் செய்தியாளர்களிடம் பேசிய போது தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ராதிகா இதற்கு பதில் அளித்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல பாடகி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து குற்றச்சாட்டு வைத்தார். அவரிடம் ஏன் இத்தனை நாட்கள் கழித்து சொல்கிறீர்கள். இதற்கு என்ன சாட்சி உள்ளது என்று பல கேள்வி கேட்டார்கள். ஒரு பெண்ணின் மனதில் ஓடக்கூடிய விஷயங்களை ஆண்களால் புரிந்து கொள்ள முடியாது.

அந்த திறமையான பாடகி தனக்கு வந்த வாய்ப்புகளை இழந்து கஷ்டப்பட்டார். அவருக்காக யார் வந்து குரல் கொடுத்தார்கள். திரைத்துறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறி இருப்பது முறையானது அல்ல. இது ஒரு தலைவர் பேசும் பேச்சு கிடையாது. நடிகைகள் குறித்து youtuber ஒருவர் தரக்குறைவாக பேசியிருப்பதை பார்த்தேன்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Comeback Chronicles: Rambha Prepares for a New Era in Cinema

விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த youtube வரை செருப்பால் அடிக்கட்டும் என்னையும் அழைத்தால் நான் தொடப்பத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன். பாலியல் அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு பெரிய நடிகர்களும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க காவல்துறை அல்லது நீதித்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தைரியம் வரும் என்று ராதிகா தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?