---Advertisement---

தெலுங்கு நடிகர் வேணு மாதவ் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்

By Sri
Published on: September 25, 2019
venu yadhav
---Advertisement---

தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.

ஆந்திராவில் மிமிக்ரி கலைஞராக இருந்து சினிமாவில் நகைச்சுவை நடிகராக மாறியவர் வேணு மாதவ். சம்பிரதாயம் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய அவர் இதுவரை 170 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில் என்னவளே, காதல் சுகமானது ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016ம் ஆண்டு வெளியான டாக்டர் பரமானந்தய்யா ஸ்டூடன்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 3 வருடங்களாக கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். எனவே திரைப்படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை 12 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மரணம் தெலுங்கு சினிமா உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிரஞ்சீவி, பவன் கல்யான், மகேஷ்பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.