---Advertisement---

ஆதார் கார்டு இன்னும் அப்டேட் பண்ணலையா..? டிசம்பர் 14ஆம் தேதி வரை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!

By Sri
Published on: September 12, 2024
---Advertisement---

ஆதார் கார்டை இன்னும் புதுப்பிக்காதவர்கள் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களின் அடையாளமாக ஆதார் கார்டு பார்க்கப்படுகின்றது. அனைத்து அரசு சேவைகளுக்கும் ஆதார் கார்டு முக்கியமாகின்றது. வங்கி கணக்கு தொடங்குவதில் தொடங்கி டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு ஆதார் கார்டு மிக கட்டாயம். இதனால் அனைவரும் தற்போது ஆதார் கார்டு வைத்திருக்கிறார்கள்.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களின் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் அறிவுறுத்துகின்றது. அதில் புதுப்பிப்பு என்பது பலரும் தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள், முகங்களை மாற்றி இருப்பார்கள். ஆனால் ஆதாரில் பழைய புகைப்படங்கள் இருக்கும்.

அதே போல் தான் கைரேகை மாறி இருந்தால் அவர்களால் ரேஷன் கடை, வங்கிகள் மற்றும் சிம்கார்டு வாங்கும் இடங்களில் சுயசான்று செய்யும்போது பிரச்சினை ஏற்படும். இந்த பிரச்சனையை தீர்க்க தான் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டு புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அணையம் தெரிவிக்கின்றது.

10 ஆண்டுகளான பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார மையத்திற்கு சென்று தங்களின் ஆதார் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள் கை ரேகைகளை புதிதாக பதிவு செய்து கொள்ள முடியும். ஆதார் கார்டுகளை நாளை மறுதினம் வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  திருப்பதியில் லட்டில் இந்த பொருட்கள் கலந்து இருக்காங்களா...? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்...!

செப்டம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகு பணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்ற சலுகை தற்போது டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாக உங்களின் ஆதார் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆன்லைன் மூலம் முகவரியையும் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual illustrating Dhanush's potential film collaborations with Venkat Prabhu and Jithu Madhavan.

வெங்கட் பிரபுவா? ஜித்து மாதவனா? தனுஷின் அடுத்த மாஸ் படத்தை இயக்கப்போவது யார்? சத்திய ஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட பிளான்!

Editorial graphic revealing Sreeleela's homely character details in Rajkumar Periyasamy's Om.

ஓம் படம்: தனுஷ் மனைவியாக முற்றிலும் மாறுபட்ட கிராமத்து ரோஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீலீலா – ராஜ்குமார் பெரியசாமி மாஸ் கூட்டணி!

Editorial visual announcing the Tamil Nadu government's official permit for 6 daily shows in theatres.

புதிய தமிழ் படங்களுக்கு தினமும் 6 காட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு – தீபாவளி ரிலீஸ்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

Editorial graphic announcing Sreeleela's official entry into the cast of Rajinikanth's Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஸ்ரீலீலா – ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

Editorial graphic illustrating the production status and promo release updates for Vetrimaaran's Arasan.

தள்ளிப்போகிறதா ‘அரசன்’ தீபாவளி ப்ரோமோ? அனிருத் இசையமைப்புப் பணிகள் மற்றும் புதிய ரிலீஸ் திட்டங்கள்!

Editorial graphic illustrating the reported multi-starrer project with Dhanush, Nani, and Mani Ratnam.

சூர்யா இல்லையா? தனுஷ் – நானி காம்போவில் மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட பான்-சவுத் திரைப்படம்!