---Advertisement---

எப்படிடா… +2வில் பெயில், மறுபடி பரீட்சை எழுதியும் பெயில்… ஆனா நீட்ல மட்டும் இவ்ளோ மார்க்… ஷாக் கொடுத்த மார்க் சீட்..!

By Sri
Published on: August 2, 2024
---Advertisement---

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான செய்தி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது நாட்டின் அரசியல் மற்றும் சமூக சூழலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. குஜராத்தில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவி பிளஸ் டூ பொதுத்தேர்வில் பெயில் ஆகி இருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் அதற்கு நடத்தப்பட்ட மறுதேர்விலும் பெயில் ஆகி இருக்கின்றார். கடந்த மே ஐந்தாம் தேதி மருத்துவ படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் சேர்ந்த மாணவி ஒருவர் 720 மதிப்பெண்ணுக்கு 705 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

ஆனால் அவர் கடந்த மார்ச் மாதம் எழுதிய +2 தேர்வில் பெயில் ஆகி இருக்கின்றார். அவர் பிளஸ் டூ தேர்வில் அறிவியல் பாடத்தில் பெயில் ஆகியுள்ளார். அதற்காக அவர் மறுத்தேர்வு எழுதப்பட்ட போதிலும் அதிலும் பெயில் ஆகி இருக்கின்றார். மறு தேர்வில் அறிவியல் பாடங்களான இயற்பியலில் 22 மதிப்பெண்களும், வேதியலில் 33 மதிப்பெண்கள் மட்டுமே அவர் எடுத்திருக்கின்றார்.

https://twitter.com/Avdheshyadavsp/status/1800148082455425252

ஆனால் நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களை எடுத்திருந்தார். இது எப்படி என்று கேள்வி எழுந்தது. இந்த வருட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு பல்வேறு முறைகேடுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Kudumbasthan Movie Review: A Heartfelt Comedy About Family and Finances

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க