---Advertisement---

மீண்டும் 7ஜி போல ஒரு படமா- செல்வராகவனின் ஆசை

Published on: October 17, 2020
---Advertisement---

கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி இத்திரைப்படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கிய செல்வராகவனுக்கு இந்த திரைப்படம் இரண்டாவது படமாக அமைந்திருந்தது. இரண்டாவது படமும் ஹிட் ஆனதால் முன்னணி இயக்குனர்களின் வரிசைக்கு வேகமாக உயர்ந்தார்.

பிறகு செல்வராகவன் பல படங்கள் இயக்கிவிட்டார் அவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உட்பட பல படங்கள் பேசப்பட்டாலும் முதல் இரண்டு படங்களான காதல் கொண்டேன், 7 ஜி அளவுக்கு படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் கடைசியாக சூர்யா நடித்த என் ஜி கே படத்தை இயக்கினார் செல்வராகவன் அதுவும் சரியாக பேசப்படாத நிலையில் தற்போது 7 ஜி போல ஒரு இனிய காதல் படம் செய்யணும்னு ஆசை என மனதில் உள்ள தன் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார் செல்வராகவன். இந்த திரைப்படம் வந்து 16 வருடங்கள் ஆன நிலையில் இது போல் ஒரு காதல் கதையை இன்றைய சூழலில் சொல்ல மிகப் பெரும் ஆசை ! என செல்வராகவன் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.