---Advertisement---

ஆந்திர முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமல்

Published on: September 29, 2020
---Advertisement---

தமிழ்சினிமாவின் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். எஸ்.பி.பி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனா தொற்று சரியான நிலையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 25ல் காலமானார்.

ஆந்திராவில் பிறந்து பாடல் உலகில் பல சாதனைகளை செய்ததால் இவருக்கு பாரத ரத்னாவை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தார்.

இந்தக் கடிதத்திற்காக ஆந்திர முதல்வருக்குக் கமல் நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வரின் கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கமல் கூறியிருப்பதாவது:

“ஆந்திர முதல்வருக்கு நன்றி. எங்கள் சகோதரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நீங்கள் அளித்திருக்கும் கவுரவம், தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள அவரது குரலின் உண்மையான ரசிகர்களின் உணர்வை எதிரொலிக்கிறது”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!