---Advertisement---

விஜய்சேதுபதியின் புதிய படம் ஓடிடியில் ரிலீஸ்

Published on: September 25, 2020
---Advertisement---

தற்போது ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்வது பேஷனான விசயமாக போய் விட்டது. சூர்யா தயாரித்த படங்கள் ஏற்கனவே ஓடிடியில் வெளியிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது சூரரை போற்று படத்தையும் ஓடிடியில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கிய க/பெ ரணசிங்கம் படமும் அக்டோபர் 2ம்தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆவதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இப்படம் தென்னக மக்களின் வாழ்க்கையை சொல்லும் கமர்சியலான படமாகும். மதுரை, பரமக்குடி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம்.

இப்படம் வரும் அக்டோபர் 2ல் ஜீ தமிழ் நிறுவனத்தின் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க