---Advertisement---

அவ்வைக்கு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என கேட்ட முருகன் ஸ்தலம்

Published on: September 22, 2020
---Advertisement---

மதுரையில் இருந்து 15 கிமீ தூரத்தில் இருப்பது அழகர் கோவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த அழகர் கோவிலை பார்த்து செல்லாமல் இருக்க மாட்டார்கள்.

பசுமை மிகுந்த மலைகளுக்கிடையே அழகாக இக்கோவில் இருக்கிறது. வைணவத்தலங்களில் முக்கியமான கோவில் அழகர் கோவில் மலையின் அடிவாரத்தில் உள்ளது.

அதற்கு மேலே பழமுதிர்ச்சோலை உள்ளது அறுபடை வீடுகளில் ஒன்றான இக்கோவிலும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் உள்ளது. சரியாக அழகர் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் பழமுதிர்ச்சோலை உள்ளது.

கோவில் சார்பில் பஸ் வசதியும் இங்கு உள்ளது.

அதற்கு மேலே உள்ள நூபுர கங்கையில் குளித்துவிட்டோ அல்லது அந்த நீரை தலையில் தெளித்துக்கொண்டோ அருகில் இருக்கும் பழமுதிர்ச்சோலை முருகனை வழிபடுவார்கள்.

novel tree

பழமுதிர்ச்சோலை முருகனின் சிறப்பு என்னவென்றால் அவ்வை பாட்டிக்கு முருகன் தமிழ் கற்றுக்கொடுத்து அவன் விளையாட்டை அரங்கேற்றம் செய்த இடம்.

இங்குள்ள நாவல் மரத்தில்தான் முருகன் சுட்ட பழம் சுடாத பழம் வேண்டுமா என அவ்வைப்பாட்டியிடம் கேட்ட இடம்தான் இது.

மிக சிறப்பு வாய்ந்த இந்த இடத்தில் பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது இது அறுபடை வீடுகளில் ஒன்றாகும். ஆறாவது படை வீடாக அழைக்கப்படுகிறது. மதுரையிலே திருப்பரங்குன்றத்தோடு சேர்த்து இரண்டு படைவீடுகள் ஒரே ஊரிலேயே அமைந்துள்ளது சிறப்பு.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து அழகர் கோவிலுக்கு பஸ் வசதி அடிக்கடி உள்ளது. இங்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு மலை மேலே உள்ள அவரின் மருமகனான முருகப்பெருமானை பழமுதிர்ச்சோலையில் தரிசனம் செய்து வாழ்வில் வளம் பெறுங்கள்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring box office milestone themes for Mandaadi.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும் திரையரங்குகளில் சாதனை படைக்கும் சூரியின் ‘மண்டாடி’: 30-வது நாளை எட்டிய திரையரங்க ஓட்டம்!

Editorial visual featuring film director and actor collaboration themes.

‘கான் சிட்டி’ படத்தைத் தொடர்ந்து சந்தானத்துடன் கைகோர்க்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்: கோலிவுட்டில் புதிய கூட்டணி!

ditorial visual featuring theatrical release themes for Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு: டிசம்பர் 4-ல் திரைக்கு வரும் சோசியல் பொலிட்டிகல் டிராமா!

Editorial visual featuring cinema debut themes.

இயக்குநரைத் தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் ஜேசன் சஞ்சய்? இயக்கவிருக்கும் பிரபல உறவினர் யார் தெரியுமா?

Editorial visual featuring cinematic themes for Vettuvam.

பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா துல்கர் சல்மான்? கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவும் தகவல்!

Editorial visual featuring nostalgic cinema themes.

தளபதி விஜய்யும், ஊர்வசியும் தான் முதல் சாய்ஸா? ‘எம்.குமரன் சடன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் சுவாரஸ்யத் தகவல்!