---Advertisement---

அதிக பட்ச விலையில் 70 சதவீதம் வரி! குடிகாரர்களுக்கு அதிர்ச்சி அளித்த முதல்வர்!

By Sri
Published on: May 5, 2020
---Advertisement---

டெல்லியில் மதுவுக்கு 70 சதவீதம் அதிக வரி விதித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்தியா முழுவதும் அறிவிக்கபப்ட்ட ஊரடங்கு 40 நாட்களைக் கடந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதை முன்னிட்டு சில மாநிலங்கள் டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளன.

இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு குடிப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதன்படி இன்று முதல் அனைத்து மதுவகைகளுக்கும் அதிகபட்ச விலையிலிருந்து 70 சதவீதம் கொரோனா சிறப்பு வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானங்களின் விலை 1700 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக வரி விதித்தால் மக்கள் அதிகமாக மது பாட்டில்களை வாங்க மாட்டார்கள் என்றும் அப்படியே வாங்கினாலும் அரசுக்கு அதிக வரி கிடைக்கும் எனவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த கொள்ளை வரிக்கு எதிராக கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.