---Advertisement---

ஒரிஜினல் விலை ரூ 245… ஆனால் அரசு வாங்கியதோ ரூ 600! ரேபிட் கிட்களின் அதிகவிலையால் அதிர்ச்சியான நீதிமன்றம்!

By Sri
Published on: April 27, 2020
Rapid Test Kit in india
---Advertisement---

இந்தியாவிற்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட்களின் விலை அதிகமாக விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழகம் வாங்கவிருந்த நிலையில் அதை மத்திய அரசு தடுத்து தாங்களே வாங்கி மொத்தமாக மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வோம் என அறிவித்தது.

இதையடுத்து கடந்த வாரம்  சீனாவில் இருந்து இந்தியா வந்த கிட்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கு அனுப்பப் பட்டன. இந்நிலையில் இந்த கிட்களின் விலை அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்தன. சதீஸ்கர் மாநில அரசு 337 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியோடு வாங்கினோம்’ எனத் தெரிவித்த நிலையில் மத்திய அரசு வாங்கிய விலை 600 ரூபாய் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவிற்கு முழுவதுமாக தாங்கள் ரேபிட் கிட் விநியோகத்திற்கு அனுமதி பெற்றிருப்பதாக ஆர்க் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்வதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ரேபிட் கிட் ரூ.245 என்ற ரீதியில் வாங்கி அதை அரசியம் ரூ.600க்கு விற்றதாக தெரிய வந்துள்ளது. 60% அதிக விலைக்கு விற்கப்பட்டதை குறித்து உத்தரவிட்ட நீதிமன்றம் வரிகள் உட்பட அனைதையும் சேர்த்து ஒரு கருவி ரூ.400க்கு மட்டுமே விற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.