---Advertisement---

படத்தை தியேட்டரில் ரிலிஸ் செய்யாமல் விற்ற சூர்யா! திரையுலகில் வலுக்கும் எதிர்ப்பு!

By Sri
Published on: April 25, 2020
---Advertisement---

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து முடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஜோதிகாவுடன் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து  படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த படத்தை சூர்யா திரையரங்கிற்கு கொண்டு வரமுடியாமல் போனது. மேலும் ஊரடங்கு விலக்கப்பட்டாலும் முதலில் பெரிய நடிகர்களின் படங்களுக்கே தியேட்டர் உரிமையாளர்கள் முன்னுரிமைக் கொடுப்பார்கள் என்பதால் படத்தை  நேரடியாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் ப்ரைமிடம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவிடம் இதுபோல செய்யக்கூடாது என வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்றும், அதனால் இனி அந்த நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் திரையிட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!