---Advertisement---

விஜய் சேதுபதியை இயக்கும் முன்னாள் சூப்பர் ஸ்டார்? செம்ம காம்பினேஷன்!

By Sri
Published on: April 25, 2020
---Advertisement---

நடிகர் விஜய் சேதுபதி ராமராஜன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.

அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் தற்போதைய ராமராஜன் என வர்ணிக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை என்றும் டைரக்‌ஷன் மட்டுமே செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராமராஜன் ஏற்கனவே தான் நடித்த மண்ணுக்கேத்த பொண்ணு உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். அவர் மறைந்த இயக்குனர் ராம நாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தகக்து.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Iconic transformation scene of Kamal Haasan as Wisam Ahmad Kashmiri in the movie Vishwaroopam.

Director Lokesh: “அந்த சீன் பார்த்தப்போ மயக்கமே வந்துடுச்சு!” விஸ்வரூபம் படத்திற்காக பேங்க் லீவு போட்ட லோகேஷ்! கமல் மீதான வெறித்தனமான அன்பு!

Gorgeous close-up and full-length stills of actress Samantha Ruth Prabhu from her recent photo shoot.

Happy Birthday Samantha: “பயத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்..” பிறந்தநாளில் சமந்தா பகிர்ந்த எமோஷனல் பதிவு! ‘மா இண்டி பங்காரம்’ ரிலீஸ் எப்போது?

TVK leader Vijay in a traditional silk dhoti and shawl offering prayers at the Thiruchendur Murugan Temple.

TVK Vijay in Thiruchendur: கையில் வேலுடன் மாஸ் காட்டிய விஜய்! திருச்செந்தூரில் அலைமோதிய மக்கள் கூட்டம்! பட்டு வேட்டியில் தவெக தலைவர் தரிசனம்!

Official poster of the movie The India Story featuring lead actors Kajal Aggarwal and Shreyas Talpade.

Kajal Aggarwal’s The India Story: “விஷமாகும் விவசாயம்.. விழித்துக்கொள்ளும் இந்தியா!” காஜல் அகர்வாலின் அதிரடி ‘தி இந்தியா ஸ்டோரி’ ரிலீஸ் தேதி இதுதான்!

Official poster and trailer still of Ajith Kumar's Billa movie re-release scheduled for May 1, 2026.

Thala Ajith Birthday Special: “பாக்ஸ் ஆபிஸை அதிரவிட வரும் டேவிட் பில்லா!” மெர்சலாக்கும் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்! மே 1-ல் மீண்டும் ‘தல’ தரிசனம்!

Actor Dhanush speaking about his son Yatra's acting debut during a press meet.

Yatra Dhanush Entry? “அவனுக்கு இன்னும் 19 வயசு தான்..” யாத்ரா நடிப்பு குறித்து தனுஷ் சொன்ன பதில்! மேடையில் நெகிழ்ச்சி!