டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்களை உருவாக்கிய ஜீன் டெய்ச் இன்று காலமாகியுள்ளார்.
கார்ட்டூன் உலகில் அனைத்துத் தரப்பினராலும் விரும்பிப் பார்க்கப்படும் தொடர்களில் ஒன்று டாம் அண்ட் ஜெர்ரி. ஜோசப் ஹன்னா மற்றும் வில்லியம் பார்பரா ஆகியோர் உருவாக்கிய இந்த தொடர் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கார்ட்டூன் தொடர்களில் குழந்தைகளை கவர்வதாக விளங்கி வரும் தொடர் டாம் அண்ட் ஜெர்ரி. 1940ம் ஆண்டில் ஹன்னா மற்றும் பார்பெரா தயாரிப்பில் வெளியான இந்த தொடரை சக் ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபலமான இயக்குனர்கள் பலர் இயக்கினர். அவர்களில் ஒருவர்தான் ஜீன் டெய்ச்.
ஆரம்ப காலங்களில் ராணுவத்தில் விமானியாக பணியாற்றிய டெய்ச்தொடர்ந்து குழந்தைகளின் விருப்ப கார்ட்டூன்களான பாபாய், டாம் எண்ட் ஜெர்ரி போன்ற தொடர்களையும் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த இவர் உடல்நல குறைவால் சில நாட்கள் முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 16 அன்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதிலும் உள்ள டாம் அண்ட் ஜெர்ரி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







