அமெரிக்கா 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனாவால் அதிக இழப்பை சந்தித்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 12,878 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸை எப்படி எதிர்கொள்வது என்பதில் அமெரிக்க அரசு ஆட்டம் கண்டுள்ளது. ஏனென்றால் வரும் நாட்களில் இந்த பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமரிக்காவில் இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 250 ஆண்டுகளில் அந்த நாடு சந்தித்த ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என சொல்லப்படுகிறது. 1775ம் ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆறு போர்களை சந்தித்துள்ளது. அதில் மொத்தமாக இழந்தது 9,961 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே மாதத்தில் கொரோனா அங்கு 12,000 பேரின் உயிரை பலி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.







